Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜனவரி 21, 2010

தொப்பை குறைய பகுதி1

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் கொண்டு அனைவருக்குமே பெரும் பிரச்னையா இருப்பது உடல் பருமன் தான். அதிலும், அடிவயிற்றில் சதைப்பிடிப்பு அதிகமாக இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். தொப்பையால் தங்கள் அழகு கெட்டுவிட்டதே என்று பல பெண்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

உடல் எடை அதிகரிப்பதற்காக அதிகமாக சாப்பிட ஆரம்பித்தாள்; ஆனால், அவள் எடை கூடவில்லை. மாறாக, அவளது அடிவயிற்றில் மட்டும் அதிமாக சதை வைத்து தொப்பை விழுந்து விட்டது. அவளது தொப்பையைக் குறைக்க ஏதாவது வழி சொல்லுங்களேன் என்று கடிதம் எழுதியிருந்தார். உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாமே ஒழிய தொப்பையைக் கரைக்க முடியாது.

தொப்பையால் வயிற்றில் சதைப்பகுதி கொஞ்சம் தளர்ந்து விடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும் கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்தவழி.

வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மற்றபடி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே, தினமும் காலை, மாலை வேளையில் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது நடப்பது உடலுக்கு நல்லது. அதிலும், காலையில் நடப்பது நல்ல பலன் தரும். அதேபோல், இரவு உணவிற்கு பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்