Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

புதன், பிப்ரவரி 17, 2010

முக்கியமான பழங்கள்! 1



நாம் தினமும் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வகையான பழங்களை கலந்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் நம் உடம்பிற்கு நல்லது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வாங்கி சாப்பிடலாம். ஒருநாளைக்கு அதிகப் பட்சம் 400கிராம் அளவாவது பழங்கள் சாப்பிட வேண்டும். இதற்க்கு பதிலாக மற்ற உணவுகளின் அளவை குறைத்து சாப்பிடலாம்.

ஆப்பிள்:
தினமும் உடலில் உள்ள விஷப் பொருட்களை வெளியேற்ற ஆப்பிள் சாறு சாப்பிடுவது நல்லது. இன்றைய கண்டுபிடிப்பு ஆப்பிளில் உள்ள வைட்டமின் (சி) மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்று ஆரோக்கியம்,சக்தி, இளமை என்ற மூன்றையும் ஆப்பிள் தருகிறது. எல்லோரும் வாங்கும் விலையில் இருக்கும் ஆப்பிளை நாம் தினமும் வாங்கி சாப்பிடலாம் அல்லவா.

வாழைப் பழம்:
பழுத்த வாழைப்பழத்தில் 76சதவிகிதம் நீர்ச் சத்தும், 20சதவிகிதம் சர்க்கரைச் சத்தும், 12சதவிகிதம் புரதச் சத்தும் உள்ளது. உடல் நலக்
குறைவால் பலவீனமானவர்கள் படிப்படியாக உடல் நலம்பெற வாழைப்பழம் உதவுகிறது. உடல்தசை நன்கு இயங்க இதி உள்ள பொட்டாசியம் வீரியத்துடன் ஆற்றலை வழங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வடர்ஹினரும் தினமும் சாப்பிட வேண்டிய பழம் வாழைப் பழம்.


ஆரஞ்சு:
மூன்று டம்ளர் பால் தரும் கலோரியை விட ஒரு டம்ளர் ஆரஞ்சு சாறு அதிகச் சத்தைத் தருகிறது. ஜீரண உறுப்புகளும் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பட இதில் உள்ள டிலிமோனின் என்ற ஃபைட்
டோ கெமிக்கல் உதவுகிறது. இரத்தம் உறைவதை தடுப்பதால் மாரடைப்பும் தடுக்கபடும் வாய்ப்பு அதிகம் உண்டு அதனால் நீங்கள் தினமும் சாப்பிடவும்.



திராட்சை:
இதயத்தை பாதுகாக்கும் குயர்சிட்டின் என்ற ஃபைட்டோ இரசாயனம் திராட்சைகளில் இருக்கிறது. புற்று நோயைக் குணமாக்கும்
ஃபைட்டோஸ்டெரல்ஸ் என்ற இரசாயனமும் திராட்சையில் இருக்கிறது.


மாதுளம்
பழம்:

இதயத்துக்கும் நெஞ்சு வலிக்கும் சக்தி வாய்ந்த டானிக் மாதுளம் பழம்.
இதிலும் எல்லாஜிக் (ELLAGIC) என்ற புற்று நோய்த் தடுப்பு அமிலம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்