Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

திங்கள், பிப்ரவரி 22, 2010

கிட்ஸ் பாஸ்தா


ஏன் இந்த பாஸ்தாவிற்க்கு கிட்ஸ் பாஸ்தா என்று
பெயர் வைத்தேன் தெரியுமா?
இந்த பாஸ்தாவை என் மகன் விரும்பி சாப்பிட்டான்
அதான் இந்த பாஸ்தாவின் பெயர் கிட்ஸ் பாஸ்தா
என் மகன் எதையாவது விரும்பி சாப்பிட்டால்
அது ஆச்சர்யம் ஏன் என்றால் அவன் எதையும்
விரும்பி சாப்பிட மாட்டான் இதை விரும்பி சாப்பிட்டான்
நீங்களும் உங்கள் குழந்தைங்களுக்கு செய்து
கொடுத்து பாருங்க அப்பறம் நீங்களும் சொல்லுவீங்க
உங்க கிட்ஸ்சும் விரும்பி சாப்பிட்டார்கள் என்று.


தேவையான பொருள்கள்
பாஸ்தா-2கப்
மஞ்சள் குடை மிளகாய்-1
வெங்காயம்-2
முட்டை-2
கருவாயிலை-1கொத்து
எண்ணை-3டீஸ்பூன்
தக்காளி சாஸ்-3டீஸ்பூன்
உருளைக் கிழங்கு சிப்ஸ்-6ஸ்லைஷ்
மஞ்சள் பொடி-1/4ஸ்பூன்
பட்டாணி-1/2கப்
உப்பு-தேவையான அளவு
அஜினமோட்டோ-1ஸ்பூன்

செய்முறை:
முதலில் பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் போட்டு
தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.

வெந்தவுடன் ஒரு ப்ளேட்டில் தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும்.

பின் கடாயில் எண்ணை விட்டு வெங்காயம்,
குடை மிளகாய் இரண்டையும் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் கருவாயிலை மஞ்சள் பொடி, பட்டாணி சேர்த்து கிளறவும்.
பட்டாணி வெந்ததும் முட்டை ஊற்றி கிளறவும். பின் அஜினமோட்டோ,உப்பு,சாஸ் சேர்த்து கிளறவும். ஏற்கனவே பாஸ்தாவில் உப்பு
சேர்த்து இருப்பதால் உங்கள் விருப்பம் போல்
சேர்த்து கொள்ளவும்.

பாஸ்தாவை அதில் போட்டு சேர்த்து நன்கு கிளறவும்.

பின் சிப்ஸை கைகளால் நொருக்கி போடவும்.
பின் 5 நிமிடம் மூடி வைக்கவும் பின் மல்லி தூவி
கிளறி இறக்கவும்.

குழந்தைங்களுக்கு பிடித்த பாஸ்தா ரெடி.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ungal thalam nandraaga ullathu

அஃப்ஸர் நிஷா சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்